திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் மண் குவாரிகளில் மணல் திருட்டு நடப்பதாகவும், அதிவேகமாக செல்லும் லாரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் கூறி, அரசு பள்ளி மாணவர்கள் பதாகைகளை ஏந்தி லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கனிம வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.