ஊராட்சி மன்ற அலுவலகம் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்

370பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மவார் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மது பாட்டில்கள், வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் அலுவலகம் முழுவதும் சிதறி கிடப்பதால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். ஊராட்சி செயல் அலுவலர் இதை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து, மது அருந்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி