திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த கர்லம்பாக்கத்தில் வசிக்கும் பத்திரப்பதிவு எழுத்தர் பழனியின் வீட்டில் சுமார் 100 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.