திருவள்ளூர்: சிறுமியிடம் அத்துமீறல்.. பூசாரிக்கு 10 ஆண்டு சிறை

3பார்த்தது
திருவள்ளூர்: சிறுமியிடம் அத்துமீறல்.. பூசாரிக்கு 10 ஆண்டு சிறை
சென்னை எண்ணூரைச் சேர்ந்த 70 வயது கோவில் பூசாரி ராஜன், கடந்த 2025 ஜனவரி 5ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை கோவில் கருவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நேற்று திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். எண்ணூர் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி