மதுரவாயலில் இருந்து கோயம்பேடு நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்த மோகன் குமார் (61) மதுரவாயல் சந்தை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மோகன் குமாரின் தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரி ஓட்டுநர் ரவி (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.