
சோழிப்பாளையத்தில் சாலை வசதி கோரி பிடிஓ அலுவலகம் முற்றுகை
சோழவரம் அடுத்த சோழிப்பாளையம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் நகர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் விபத்துக்களில் சிக்குவதாகவும், பள்ளி குழந்தைகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் சிரமம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விஷ ஜந்துக்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் வரி வசூலிக்கும் நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தராதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.































