மணலிபுதுநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பழைய நாப்பாளையம் மற்றும் விச்சூர் ஆகிய இருவேறு இடங்களில், 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் அரங்கேறின. இதன் எதிரொலியாக, செங்குன்றம் காவல் துணை கமிஷனர் பாலாஜி உத்தரவின் பேரில், மணலி உதவி கமிஷனர் விவேகானந்தன், மணலிபுதுநகர் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார், 12 பழைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.