எண்ணூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரவீன்(19) நேற்று முன்தினம் இரவு, ஆட்டோவில் சென்றபோது, இருவர் இடைமறித்து ஏறி, சிறிது தூரம் சென்றதும் கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து தப்ப முயன்றனர். சக வாகன ஓட்டிகள் அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் நரேஷ் மற்றும் கார்த்திக் என தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.