பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் நேற்றிரவு சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அவரை வெட்டிவிட்டு கொலையாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த கொலை சம்பவத்திற்கு பல கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆற்காடு பாலு மற்றும் அவரது ஆதரவாளர்களே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.