கும்மிடிப்பூண்டி அருகே துராபள்ளம் பகுதியில், சென்னை-கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இணைப்பு சாலை சந்திப்பில், விபத்து அபாய எச்சரிக்கை விளக்கு கம்பம் சாய்ந்ததால், வாகன ஓட்டிகள் பார்வைக்கு தெரியாமல் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில், வாகனம் மோதி கம்பம் சாய்ந்ததால், மஞ்சள் நிற விளக்கு தெரியாமல் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.