புழல், காவாங்கரை, பன்னீர்செல்வம் தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற மாநகர போக்குவரத்து கழக நடத்துநர் கருணாகரன்(62) என்பவர், தன் வீட்டருகே புதிதாக கட்டி வரும் வீட்டிற்கான கட்டுமானப் பொருட்களை வைத்துள்ளார். இதனால், இவரது வீட்டருகே வசிக்கும் பிரேம்நாத் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கருணாகரன் நடைபயிற்சி சென்றபோது, பிரேம்நாத் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கை மற்றும் கம்பால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் பிரேம்நாத்(36) கைது செய்யப்பட்டார்.