சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், நொளம்பூர் பகுதியில் மாநகராட்சி பூங்கா அருகே நிறுத்தி வைத்திருந்த தனது பைக்கை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நொளம்பூர் போலீசார், பைக் திருட்டில் ஈடுபட்ட மெக்கானிக் புருஷோத்தமன்(46) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.