கிரிப்டோ கரன்சி மோசடி: ஒருவர் கைது

2பார்த்தது
கிரிப்டோ கரன்சி மோசடி: ஒருவர் கைது
போரூரைச் சேர்ந்த யோகானந்த் (43) என்பவர் சமூக வலைதளத்தில் கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பான விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறிய நபர், யோகானந்த்திடம் இருந்து 13 வங்கி கணக்குகளுக்கு ரூ.1.73 கோடி வரை பல்வேறு தவணைகளில் முதலீடாகப் பெற்றுள்ளார். ஆனால், பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட யோகானந்த் அளித்த புகாரின் பேரில், அன்பழகன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி