திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நெல்லூர் அம்மன் திருக்கோயிலில் 23ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து, பக்தியுடன் தீக்குண்டம் இறங்கி தீமிதித்து அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல், மெதூர் பாரதி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலிலும் தீமிதி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களும் விரதம் இருந்து தீமிதித்து அம்மனை வழிபட்டனர்.