பொருட்காட்சிக்கு வந்த 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

1பார்த்தது
பொருட்காட்சிக்கு வந்த 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்
தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அத்விக் (6) என்ற சிறுவன், நேற்று முன்தினம் மாலை தீவுத்திடலில் நடந்த பொருட்காட்சியைப் பார்க்க வந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று அவனைத் துரத்தித் தொடையில் கடித்துள்ளது. பெற்றோர் சிறுவனை மீட்டு அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்து, தடுப்பூசி போட்டுள்ளனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொருட்காட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி