வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

3பார்த்தது
வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர்களை சில உணவகங்கள் பயன்படுத்தி வருவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர உணவகங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், இதுவரை 36 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி