சாலையில் கொட்டப்பட்டுள்ள நெல்: விவசாயிகள் குற்றச்சாட்டு

0பார்த்தது
சாலையில் கொட்டப்பட்டுள்ள நெல்: விவசாயிகள் குற்றச்சாட்டு
திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 15,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக பாகசாலை, ஒரத்துார், பொன்னாங்குளம், பெரியகளக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 8,000 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பாகசாலை நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை வாங்காமல், அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன் வியாபாரிகளின் நெல் மட்டும் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.