கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் இருந்து சித்தூர் நத்தம் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளதை சீரமைக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், இரண்டு மாதங்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.