கும்மிடிப்பூண்டி கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து

199பார்த்தது
கும்மிடிப்பூண்டி கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து
கும்மிடிப்பூண்டி அருகே கெமிக்கல் தொழிற்சாலையில் சல்பியூரிக் ஆசிட் சேமிப்புப் பகுதியில் இன்று (பிப்ரவரி 26) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்து, சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பரவியது. இந்த நச்சுப் புகையால் அருகில் உள்ள கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் தொழிற்சாலை கட்டிடம் சேதமடைந்துள்ளது. பாதிரிவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி