திருவள்ளூர்: வருவாய்த் துறையினரைக் கண்டித்து கிராம சபை புறக்கணிப்பு

713பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வட்டத்திலுள்ள அத்திப்பேடு ஊராட்சி, ஜெகநாதபுரம் கிராமத்தில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான பொதுச்சொத்து சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வருவாய்த் துறையிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து, வருவாய்த் துறையினரைக் கண்டித்து இன்று போராட்டம் நடத்தினர். ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும், பழைய பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

தொடர்புடைய செய்தி