ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

118பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தாமரை ஏரி சிப்காட் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து, துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் அபாயத்தில் உள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனைப் பாதுகாக்க வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். தொழிற்சாலை கழிவு நீரை ஏரியில் கலப்பதைத் தடுக்க வேண்டும், நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும், மற்ற ஏரிகள் மாசடைவதைத் தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டனப் பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோதும், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.