திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள அரிச்சந்திராபுரம் ஊராட்சி, திடீர் நகரைச் சேர்ந்த 17 வயது பாசில், நேற்று மாலை சூறைக்காற்று வீசியபோது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சர்ச் அருகே இருந்த இரும்பு ஷீட் கொட்டகையிலிருந்து ஒரு ஷீட் பறந்து வந்து பாசில் மீது விழுந்தது. இதில், பாசில் தலையில் பலத்த காயமடைந்தார். உறவினர்கள் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.