திருவள்ளூர்: தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா

70பார்த்தது
திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த மே மாதம் 20ம் தேதி ஜமாபந்தி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 1225 மனுக்கள் பெறப்பட்டது. நிறைவு விழாவிற்கு ஜமாபந்தி அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ரஜினிகாந்த் வரவேற்றார். தலைமையிடத்து வட்ட சார் ஆய்வாளர் தனசேகர், வட்ட வழங்கல் அலுவலர் ராமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் எம்எல்ஏக்கள் பூந்தமல்லி ஆ. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் எம்எல்ஏ வி. ஜி. ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர். அதன்படி முழு புலம் பட்டா 70 நபர்களுக்கும், உட்பிரிவு பட்டா 65 நபர்களுக்கும், வீட்டு மனை பட்டா 55 நபர்களுக்கும் என மொத்தம் 190 பேருக்கு பட்டாக்களையும் வழங்கினர். அதேபோல் பட்டா மேல்முறையீடு, சமூக பாதுகாப்பு திட்டம், குடும்ப அட்டை, பல்வேறு சான்றுகள், இதர மனுக்கள், பிற துறை மனுக்கள் என மொத்தம் 270 பயனாளிகளுக்கு பட்டா மற்றும் சான்றுகளை வழங்கினர். 12 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் 1225 நபர்கள் மனு செய்த நிலையில் 270 நபர்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 955 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி