ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர், சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தெலுங்கு-கங்கை திட்ட ஒப்பந்தப்படி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட நீர் 152 கிலோமீட்டர் பயணித்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை அடைந்தது. தெலுங்கு-கங்கை திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் ஆந்திர அரசு 12 டிஎம்சி நீர் வழங்கி வருகிறது.