திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில், பொன்னேரி அடுத்த பழவேற்காடு கூணங்குப்பம் அருகே உள்ள சவுக்கு தோப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, இறந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.