சென்னை மணலி அருகே தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் இருந்த எண்ணெய் கேன்கள் வெடித்துச் சிதறியதால் 5 மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. மக்கள் மூச்சி விடமுடியாமல் தவித்து வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த குடோனுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.