மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன் (36), வீட்டருகே நின்றபோது 5 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாண்டியன், அதே பகுதியைச் சேர்ந்த சூறைவேந்தன் என்பவருடன் இருந்த முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் சூறைவேந்தன் (20) உட்பட இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.