திருவள்ளூர்: படத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள்

50பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் க. சுந்தரம் திருவருவ படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
கேஎன் நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு க. சுந்தரத்தின் நினைவு புகைப்படக் காட்சியை ரிப்பன் வெட்டி பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைத்தனர். பின்னர் அவரது திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு பேசுகையில் கலைஞர் காலத்தில் இருந்த 18 அமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள் தங்களுக்கு கட்சி தலைவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தந்தார்கள். ஒற்றுமையுடன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்கள் என்றும், ஆனால் தற்போது ஒற்றுமை இல்லை என்று நான் சொல்லவில்லை எனத் தெரிவித்த அவர் கலைஞர்
க. சுந்தரம் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர் என்றும், வடசென்னை அனல் மின் நிலையம் துறைமுகம் போன்றவற்றை கலைஞர் மறைந்த அமைச்சர் க. சுந்தரத்தின் மூலம் ஏற்படுத்தினார் என்றும் அவரது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

இதில் அமைச்சர்கள் சாமு நாசர், மதிவேந்தன், பெரிய கருப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள்
துரை சந்திரசேகர், கோவிந்தராஜன், கிருஷ்ணசாமி, எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி