சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 50 வயது கட்டடத் தொழிலாளி பாண்டியன், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் ஒரு வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 15 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொன்னேரி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.