திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கே. ஜி. கண்டிகையில் மலை மற்றும் வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இறையை தேடி சாலையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதனை பார்த்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், பாம்பை லாவகமாக பிடித்து பத்திரமாக கோணிப்பை ஒன்றில் அடைத்து வைத்தனர். மலை பாம்பு பிடிக்கப்பட்டது குறித்து திருத்தணி வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
ஆனால் வனத்துறையினர் ஜாக்கிரதையாக நாளை (செப்.10) காலை வந்து மலை பாம்பை பெற்று செல்வதாக தொலைபேசியில் தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையேடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் ஒரு மணி நேரம் கால தாமதமாக வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு வந்து பையில் அடைத்து வைத்திருந்த மலை பாம்பை பெற்று சென்றனர்.