கடம்பத்துார் ஒன்றியத்தைச் சேர்ந்த 18 வயது சட்டக் கல்லூரி மாணவி பாரதி, தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் விரக்தியடைந்து டிசம்பர் 11 அன்று தற்கொலை செய்து கொண்டார். கல்லுாரி நிர்வாகம் நான்கு ஆண்டு கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை, மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணவாளநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.