வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.3) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தவிட்டுள்ளார்.