மப்பேடு அருகே லாரி மோதி தம்பதி காயம்

742பார்த்தது
மப்பேடு அருகே லாரி மோதி தம்பதி காயம்
திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாபு (50) மற்றும் அவரது மனைவி கீதா (45) மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி