பாலவாக்கத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

2பார்த்தது
பாலவாக்கத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான பைக்கை நிறுத்தினர். பைக்கை கண்டதும் இருவர் தப்பியோட முயன்றனர். துரத்திப் பிடித்த போலீசார், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சையத் முசாரப் (26) மற்றும் சுகுமார் (38) ஆகியோரை விசாரித்ததில், அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, பைக் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி