சாலையை சீரமைப்பதில் மெத்தனம் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் அன்றாடப் பணிகளுக்குச் செல்லவும், மருத்துவமனை, காவல் நிலையம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, அனைத்துக் கட்சி சார்பில் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர், தற்காலிகமாக சாலையைச் சீரமைப்பதாக அளித்த உறுதியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
Job Suitcase

Jobs near you