திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

1பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை திடீரென மேகங்கள் திரண்டு சிறுவனூர், கண்டிகை, திருப்பாச்சூர், சேலை, வேடங்கிநல்லூர், புல்லரம்பாக்கம், தலக்காஞ்சேரி, எடப்பாளையம், ஈக்காடு, காக்களூர், மணவாளநகர், அதிகத்தூர், வெங்கத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து இதமான சூழல் நிலவியது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில், நேற்று பொன்னேரி, கும்முடி, பூண்டி சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது. இன்று மாலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம், சிபிஎன் நாயுடு சாலை, நேதாஜி சாலை, சத்தியமூர்த்தி தெரு, பஜார் வீதி, வீரராகவர் சுவாமி கோவில், உழவர் சந்தை, பேருந்து நிலையம் என பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

தொடர்புடைய செய்தி