திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மின்கம்பியில் சிக்கி அறுந்த காற்றாடி நூல், பைக்கில் சென்ற தனியார் நிறுவன ஊழியரின் கழுத்தை அறுத்து படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.