பூந்தமல்லி அடுத்த குன்றத்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 3.6 ஏக்கர் நிலத்தில், இயற்கை தாயகம் என்ற தனியார் அறக்கட்டளை பசுமை பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று, கருவேல மரங்களை அகற்றி, சந்தனம், செம்மரம், தேக்கு, மா, பலா, கொய்யா உள்ளிட்ட பழ மரங்கள், பூ வகைகள், கொடி, செடிகள் நட உள்ளனர். இந்த துவக்க விழாவில் கோவில் செயலர், அறங்காவலர் மற்றும் காவல் ஆய்வாளர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.