திருநின்றவூர்: பிறந்தநாளன்று மதுபோதையில் வாலிபர் வெட்டிக்கொலை

179பார்த்தது
திருநின்றவூர் பெரியார் நகரில் பிறந்தநாள் அன்று மதுபோதையில் நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்ட முகேந்திரன்(25) என்ற பெயிண்டர், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரால் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஞாயிறு இரவு 10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து முகேந்திரனை தாக்கிவிட்டு தப்பியோடினார். திருநின்றவூர் போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி