பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஆர்டிஓ சோதனை சாவடியில் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலையடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேர சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களிடம் அதிக லஞ்சம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.