செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் தகவலின் பேரில், நசரத்பேட்டை போலீசார் மற்றும் ஆவடி வெடிகுண்டு நிபுணர்கள் பிலிம் சிட்டிக்குச் சென்று மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். வாகனங்கள் அனைத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால், இது புரளி எனத் தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.