திருவள்ளூர்: உணவு சாப்பிட்டு விட்டு உறங்கிய சிறுவன் உயிரிழப்பு

73பார்த்தது
திருவள்ளூர்: உணவு சாப்பிட்டு விட்டு உறங்கிய சிறுவன் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உணவு சாப்பிட்டு விட்டு உறங்கிய மாணவன் வாந்தி எடுத்து மயங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சோகம். 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் மேட்டுதெருவைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரின் மகன் பரத் பெரியபாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன். 
இரவு வீட்டில் உணவு அருந்திவிட்டு உறங்கிய பொழுது உணவு செரிக்காமல் நான்கு முறை வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டவர், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்ததால் மாணவனின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவன் உயிரிழந்த விவகாரம் குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி