திருவொற்றியூர்: வாகனம் ஏறி மூதாட்டி பரிதாப பலி

1188பார்த்தது
திருவொற்றியூர்: வாகனம் ஏறி மூதாட்டி பரிதாப பலி
சென்னை திருவொற்றியூர் அருகே, 84 வயது கன்னியநாயகி என்பவர் தனது மகளுடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயில் அருகே அமர்ந்திருந்தபோது, அங்கு நின்ற டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநர், கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி மூதாட்டி மீது ஏற்றியுள்ளார். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து ஓட்டுநர் போதையில் இருந்ததால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மகளின் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி