மீஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள தனியார் உணவகங்களில், வணிக காஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக பொன்னேரி வட்ட வழங்கல் துறைக்கு புகார் வந்தது. நேற்று, வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், நான்கு உணவகங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.