மதுரவாயல்: போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது

575பார்த்தது
மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சீமாத்தம்மன் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்டபோது, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சாரதி, தீபக், ஹரிஷ் மற்றும் சென்னேரிகுப்பத்தைச் சேர்ந்த பிரசாந்த் ஆகிய நான்கு பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1,235 போதை மாத்திரைகள் மற்றும் மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி