அடிக்கடி மின் வெட்டு: மக்கள் குற்றச்சாட்டு

119பார்த்தது
அடிக்கடி மின் வெட்டு: மக்கள் குற்றச்சாட்டு
திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் மணலி பகுதிகளில் சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்தடை பிரச்சனையை சரிசெய்யக் கோரி மின்சார வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் தெருமுனையில் நின்று மின்வாரியத்தை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர், சாத்தாங்காடு மின் ஊழியர்கள் வந்து மின்தடை பிரச்சனையை சரி செய்தனர்.

தொடர்புடைய செய்தி