மருத்துவமாணவர்கள் சமத்துவபொங்கல்: 65இன்ச் ஸ்மார்ட்டிவிபரிசு

3பார்த்தது
பூந்தமல்லி அடுத்த மதுரவாயல் அடையாளம்பட்டில் உள்ள ஶ்ரீ லலித்தாம்பிகை மருத்துவக் கல்லூரியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் ஏசி சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்தும், உரியடி, கோலம், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளிலும் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு எல். ஈ. டி. ஸ்மார்ட் டிவி, வாசிங் மெசின், பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி