திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து
டி.எஸ்.பி. ராஜா கூறுகையில், பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்தார். போலீசார் மூலம் சாலையின் இருபுறமும் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மீது வியாபாரம் செய்ய அறிவுறுத்தி உள்ளதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.