சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ். எஸ். ஐ தூக்கிட்டு தற்கொலை

27பார்த்தது
செவ்வாப்பேட்டை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த கிரிதரன் (57), கடந்த மாதம் நடந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஆதிகேசவன் கொலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செவ்வாப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 12ம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை பார்க்க வந்த ஆதிகேசவன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி கிரிதரன் உட்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி