திருவள்ளூர்: பெண்ணிடம் ரூ.50000 லஞ்சம்.. வனச்சரக அலுவலர் கைது

2பார்த்தது
திருவள்ளூர்: பெண்ணிடம் ரூ.50000 லஞ்சம்.. வனச்சரக அலுவலர் கைது
செம்மரக்கட்டைகள் வாங்கி விற்பதற்கான ஒப்புதல் கடிதத்திற்காக விண்ணப்பித்த பெண்ணிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய வனச்சரக அலுவலர் சரவணன், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஊத்துக்கோட்டை அடுத்த சீத்தஞ்சேரி வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றி வந்த சரவணனிடம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் விண்ணப்பித்திருந்தார். லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சாந்தி அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் சரவணன் கையும்களவுமாகப் பிடிபட்டார்.

தொடர்புடைய செய்தி